Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நெற்பயிருடன் துள்ளி விளையாடும் மீன்கள் [வீடியோ]

Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2016 (16:59 IST)

Widgets Magazine

சீனாவில் உள்ள வயல் வெளிகளில் நெற்பயிருடன் மீனையும் வளர்ப்பது பெரும் பயனைத் தருவதாக விவசாயிகள் கருதுகிறார்கள்.
 

 
சாதரணமாக வயல்வெளிகளில் நெற்பயிரை பயிருட்டு வளர்ப்பதை விட, மீன்களையும் சேர்த்து வளர்க்கும்போது, அதிக லாபமும் பலனும் விவாயிகளுக்கு கிடைக்கிறது.
 
சீனாவின் தெற்குப் பகுதிகள் வயல்வெளிகளில் நெற்பயிருக்கு தேக்கி வைத்திருக்கும் நீருடன் மீனையும் சேர்த்து வளரவிடுகிறார்கள். நீரில் வளரும் களை செடிகள் மீனுக்கு உணவாகின்றன. நீரின் அடிப்பகுதியிலும், மேல் பகுதியிலும் வளரும் களைசெடிகளையும் மீன்கள் உண்ணுகின்றன.
 
நத்தை, கொசு லார்வா மற்றும் பல்வேறு சிறு பூச்சி இனங்கள் போன்றவற்றையும் மீன்கள் உண்ணுகின்றன. பைடோபிலான்க்டன் போன்ற பாக்டீரியாக்க்களும் மீனுக்கு உணவாகின்றன. மீன் உண்ணும் இவை அனைத்தும் நீரில் இருக்கும் சத்துக்காக பயிரோடு போட்டியிடுபவை. அவற்றைத்தான் மீன்கள் உண்கின்றன.
 
அதேபோல மீனின் எச்சக் கழிவு பயிருக்கு சிறந்த உரமாகிறது. வேறு ரசாயன உரங்கள் தேவைப்படுவது இல்லை. மேலும், மீன்களை வளர்க்கும் வயல்களில் நைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்ததாய் உள்ளன. அடி மண் பகுதி மீனால் கிளறப்படுவதால் காற்றோட்டம் உள்ளதாய் மாறுகிறது.
 
அறுவடையின் போது பயிருடன் மீனும் கிடைக்கிறது. சராசரியாக சீனாவில் 67 லட்சம் டன் மீன்கள் வயல்களில் உற்பத்தி செய்யப் படுகின்றன. ரசாயனப் பயன்பாடு இன்றிய இந்தப் பயிர் வளர்ப்பு இயற்கை விவசாயத்துக்கு சீனாவின் கொடை என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

வீடியோ கீழே:

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பாரீஸ் சென்ற அமெரிக்க மாடல் அழகியை கட்டி வைத்து நகை கொள்ளை

பாரிஸ் நாட்டிற்கு சென்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலமும், மாடலுமான கிம் ...

news

ரயில் நிலையத்தில் மேலும் ஒரு பயங்கரம்: கல்லூரி மாணவரை வெட்டிய மர்ம கும்பல்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ...

news

தலைமைச் செயலகம் ‘டூ’ மருத்துவமனை; மருத்துவமனை ‘டூ’ தலைமைச் செயலகம் - விஜயகாந்த் கொந்தளிப்பு

தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள், இப்பொழுது மருத்துவமனையையே தலைமைச் ...

news

தாத்தாவுடன் பேத்தி காதல் திருமணம்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாத்தா என்று தெரியாமல் அவரை காதலித்து திருமணம் ...

Widgets Magazine Widgets Magazine