வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (13:23 IST)

வர்த்தக போர்: வரியை ரத்து செய்தது சீனா!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. 
 
அமெரிக்கா சீனாவை எதிர்த்து வரும் நிலையில், சீனா அமஎரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், தனது அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தில் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறது. 
 
எனவே, இதன் முதற்கட்ட முயற்சியாக இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் சோயா பீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்துள்ளது. 
 
இதுவரை அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வந்த சீனா இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதற்கு முன்னர் சோயா பீன்ஸ் மீது 3 சதவீதமும், சோயா பீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதமும் சீனா வரி விதித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரத்து செய்யப்பட்ட வரி விதிப்பு ஜூலை முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.