வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 23 ஜூலை 2014 (12:00 IST)

குழந்தைத் திருமணங்கள் ஆறாவது இடத்தில் இந்தியா: ஐ.நா தகவல்

உலக அளவில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும் நாடுகளில், இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. சபையின் சர்வதேச குழந்தைகள் அவசரகால உதவி நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைத் திருமணங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேச குழந்தைகள் அவசரகால உதவி நிதி அமைப்பு (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“சஹாரா பகுதியைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாடுகள், தெற்கு ஆசியத் துணைக் கண்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது சாதாரணமான ஒன்றாக உள்ளது.

உலக அளவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் பாதி அளவு தெற்காசிய நாடுகளில்தான் நடத்தப்படுகின்றன. இதில், 18 வயதை எட்டுவதற்கு முன்பே 70 கோடி சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுள் மூன்றில் ஒரு பங்கு குழந்தைள் 15 வயதுகூட நிரம்பாதவர்கள். இந்தியாவில் திருமணம் முடித்த 20 முதல் 49 வயதுக்குள்பட்ட பெண்களில் 27 சதவீதம் பேருக்கு 15 வயதுக்குள்ளும், 31 சதவீதம் பேருக்கு 18 வயதுக்குள்ளும் மணமாகியுள்ளது.

நைகர், வங்கதேசம் சாட், மாலி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் உலகில் அதிகளவு குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.