வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (12:48 IST)

எஸ்கலேட்டரில் சிக்கி நான்கு வயது குழந்தை உயிரிழப்பு

சீனாவில் உள்ள சாங்யூங்யில் நேற்று காலை 11 மணிக்கு நான்கு வயதான குழந்தை ஒன்று ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி படிக்கட்டில் மாட்டி உயிரழந்த சம்பவம் நடந்துள்ளது.

நகரும் படிக்கட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக அதில் மாட்டியுள்ளான் உடனடியாக ரயில் நிலைய பணியாளர்கள் தானியங்கி படிக்கட்டை நிறுத்தி சிறுவனை காப்பாற்ற முயற்ச்சி செய்தனர். தானியங்கி படிக்கட்டின் கீழே மாட்டிய சிறுவனின் உடலை மீட்டி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரைந்தனர் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.



சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பொழுது அவன் இதய துடிப்பு நின்றுவிட்டது என மருத்துவமனையின் துணை மருத்துவர் சொஹு நியூஸ் என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது மாதிரி சம்பவம் சீனாவில் நடப்பது புதிதல்ல கடந்த சில மாதங்களில் இது போன்று பல சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது.

ஹுபேயில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நகரும் படிக்கட்டு சரிந்ததில் 30 வயதான பெண் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கு சமீபத்தில் தான் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது மகனை காப்பாற்ற முயற்சி செய்தபோது நகரும் படிக்கட்டு அவரின் உயிரை விழுங்கியது.

அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு வயது சிறுவன் ஒருவனின் கை தானியங்கி படிக்கட்டில் மாட்டி சிதைந்து போனது.

இதே போல் ஷாங்காயில் ஒரு வணிக வளாகத்தில் துப்புரவு பணியாளரின் கால் தானியங்கி படிக்கட்டில் மாட்டி துண்டிக்கப்பட்டது.