வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 அக்டோபர் 2016 (15:52 IST)

கே.எப்.சி மீது ரூ.133 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!

விளம்பரத்தில் உள்ளது போல சிக்கன் வழங்காததால் கே.எப்.சி. நிறுவனம், ரூ. 133 கோடி நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என மூதாட்டி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கே.எப்.சி., நிறுவனம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பக்கெட் சிக்கன் விளம்பரத்தை ஒளிபரப்பியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மூதாட்டி, கடைக்கு சென்று அதை இந்திய மதிப்பின் படி ரூ.1330 கொடுத்து வாங்கியுள்ளார்.
 
அதை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிட நினைத்த அந்த மூதாட்டி, பக்கெட்டை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் விளம்பரத்தில் உள்ளது போல நிறைந்த அளவிலான சிக்கன் இல்லாமல் குறைவாக இருந்துள்ளது. 
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி, பொய்யான விளம்பரங்களை கே.எப்.சி. ஒளிபரப்பிதால் தான் நஷ்டமடைந்ததாகவும், ஏமாற்றப்பட்ட் தாகவும் கூறி ரூ.133 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இதை எப்படியாவது சரிகட்ட நினைத்த கே.எப்.சி. நிறுவனம், அந்த மூதாட்டிக்கு இரண்டு பரிசுக்கூப்பன்களை அனுப்பியது. ஆனால் அந்த மூதாட்டி தனக்கு நஷ்ட ஈடு வழங்கியே தீர வேண்டும் என்று அந்த கூப்பன்களை திருப்பி அனுப்பிவிட்டார்.