வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (12:36 IST)

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண்!

கனடாவை சேர்ந்த மரிசா என்ற பெண் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தருகிறார். 


 
குழந்தை பெற முடியாதவர்களுக்கு உதவவே 10 மாதம் குழந்தையை சுமந்து 16 மணி நேரம் பிரசவ வலியை அனுபவித்து இலவசமாக குழந்தை பெற்றெடுத்து தருகிறார் இந்தக் கனடியப் பெண்மணி.
 
ஸ்பெயினை சேர்ந்த ஜீசஸ், ஜூலியோ என்ற தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையால் மரிசா "மலேனா"  என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து தந்துள்ளார். அந்த குழந்தை 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.
 
அவர் கூறும் போது, நான் இவர்களுக்கு ஒரு குழந்தையை மட்டும் உருவாக்கவில்லை, நன் ஒரு பாரம்பரியத்தையே  உருவாக்குகிறேன். குழந்தையை பிறருக்கு கொடுக்கிறாயா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இது ஒன்றும் என் குழந்தை இல்லை  கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்த தருணம் முதலே இது அவர்களின் குழந்தை . நான் ஒரு குழந்தைக்கு காவல் இருப்பது போலவே உணர்கிறேன். 
 
கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. அமெரிக்காவில் வாடகை தாய் கருவை சுமக்க 60,000 - 1,20 ,000 டாலர் பணம் பெறுவார்கள் . கனடாவில் நாங்கள் அப்படி செய்யவில்லை . நான் ஒன்றும் குழந்தை பெரும் இயந்திரம் இல்லையே என புன்னகைத்தபடி சொல்கிறார் மரிசா .
 
பரந்த மனம் உள்ள ஒரு வலிமையான பெண்ணால்  குழந்தை "மலேனா" இந்த உலகத்திற்கு வந்திருக்கிறாள். அந்த குழந்தை தற்போது  4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது. மலேனா தன் தாய் தந்தையுடன் தற்போது ஸ்பெயின் செல்ல உள்ளார்.