நாடளுமன்றத்தில் கனடா பிரதமரின் குழந்தை செய்த சேட்டை!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 16 மே 2017 (11:29 IST)
தனது 3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்து கனடா நாட்டு பிரதமர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

 
 
கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ருடியு. அவர் செய்த சீர்திருத்த நடவடிக்கைகளால் அந்நாட்டு மக்களிடம் மிகுந்த நற்பெயர் பெற்றுள்ளார். 
 
ஓரினச் சேர்க்கையாளர் பிரச்னை, அகதிகள் வருகை என எதுவாகினும் அவருடைய பங்களிப்பு முன்னணியில் உள்ளது. 
 
இதனால் கனடாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் அனைவராலும் மதிக்கப்படுகிறார். 


 

 
இந்நிலையில் தனது 3 வயது மகன் அட்ரீயாங் ட்ருடியு உடன், அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது மகனுடன் விளையாடி நேரம் செலவிட்டுள்ளார். அதே சமயம் தனது அலுவலக பணியையும் செய்துள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :