கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: பெண் போலீஸ் அதிகாரி உட்பட 16 பேர் பலி

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு
Last Modified திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:58 IST)
கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு
கனடாவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரி என்றும் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கனடா நாட்டிலுள்ள நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் என்பீல்ட் என்ற பகுதியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 16 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரி என்பதும் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதும் தெரியவந்து உள்ளது

இதனை அடுத்து போலீசார் மர்ம நபர் மீது எதிர்தாக்குதல் நடத்தி நடத்தினார்கள். பல மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு அந்த மர்ம நபரை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பெயர் கேப்ரியல் என்றும் அவருக்கு வயது 51 என்றும், போலீஸ் உடை அணிந்து அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் தெரிய வந்தது. அவர் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை


இதில் மேலும் படிக்கவும் :