வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (14:41 IST)

ராஜபக்சே விமானம் தரையிறங்க கனடா அரசு அனுமதி மறுப்பு

கியூபாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் விமானம், கனடாவில் தரையிறங்கி பெட்ரோல் நிரப்புவதற்கு கனடா அரசு அனுமதி மறுத்துள்ளது.
 
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் அவரது விமானத்துக்கு பெட்ரோல் (எரிபொருள்) தேவைப்பட்டது. அதற்காக கனடாவில் தரை இறங்க அனுமதி கோரப்பட்டது.
 
ஆனால் அவரது விமானம் கனடாவில் தரை இறங்க அனுமதி தர அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. எனவே அவர் பயணம் செய்த விமானத்துக்கு அங்கு பெட்ரோல் நிரப்பப்படவில்லை. இந்த தகவலை லங்காஸ்ரீ ரேடியோவின் ஆய்வாளர் சுதர்மா தெரிவித்தார்.
 
கனடா அரசின் அதிகார பூர்வமான குழு சமீபத்தில் இலங்கை சென்றது. அக்குழுவை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் அவமதித்து அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இலங்கை அதிபரின் விமானம் தரையிறங்க கனடா அரசு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
 
இறுதி கட்ட போரின்போது இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. அது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அதற்கு கனடாவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.