வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 1 டிசம்பர் 2014 (12:55 IST)

மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே நகர்ந்து செல்வதால் அச்சமடையும் மக்கள்

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மரண பள்ளத்தாக்கு ஒன்றில், பாறைகள் தானாகவே நகர்ந்து செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
கலிபோர்னியாவில் சாதாரண கற்கள் மட்டுமின்றி, 300 கிலோ எடையுள்ள கற்களும் நகர்ந்து செல்கிறது. இதனால் பேய் பிசாசுகள் இதுபோல கற்களை நகர்த்துவதாக மக்கள் மத்தியில் அச்சம் பரப்பப்பட்டது.
 
இந்நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள் அந்தப் பள்ளத்தாக்கில் ஆய்வுகளை மேற்கொண்டனர். சில விஞ்ஞானிகள் சிறப்பு அனுமதி பெற்று தாங்கள் கொண்டு சென்ற கற்களை பொருத்தி ஜி.பி.எஸ் மூலமாக ஆய்வு செய்தபோது கல் நகர்ந்து செல்வதையும், அதன் தூரத்தையும் உறுதி செய்து கொண்டனர்.



 
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இரவு நேரத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகவும், பகல் நேரத்தில் அதுவே உருகி தண்ணீராகவும் பெருக்கெடுக்கிறது.
 
மேலும், இதுவும் பாறை நகர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர் இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.