Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தானில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்து 23 பேர் பலி

பாகிஸ்தானில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்து 23 பேர் பலி


Sasikala| Last Updated: சனி, 24 செப்டம்பர் 2016 (11:44 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாபராபாத் நகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவுசேரி மலைப்பாதை வழியாக சுமார் 30 பயணிகளுடன் நேற்றிரவு ஒரு மினிபேருந்து சென்று கொண்டிருந்தது.
 
 

30 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த பேருந்து திடீரெனெ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையின் ஓரத்திலிருந்த குளத்தில் பாய்ந்தது.
 
ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையின் ஓரம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த நீலம் ஆற்றுக்குள் சுமார் 110 மீட்டர் ஆழத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் தப்பிக்க முடியாத சூழ்நிலையில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
 
இந்த விபத்தில் 25 பயணிகள் பலியானதாகவும், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :