செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : புதன், 16 ஜூலை 2014 (18:17 IST)

சீனாவில் புதிய வளர்ச்சி வங்கி - முதல் தலைவர் இந்தியர்

ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டில் (BRICS Summit) ஃபோட்லேசா பிரகடனம் (Fortaleza Declaration) ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய வளர்ச்சி வங்கி [New Development Bank (NDB)] நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க நிதிக் கையிருப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆறாவது பிரிக்ஸ் மாநாட்டில் கையொப்பம் இடப்பட்டது.
 
இந்த புதிய வளர்ச்சி, வங்கி சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (100 பில்லியன் அமெரிக்க டாலர்) துவக்க முதலீட்டுடன் நிர்வகிக்கப்படும். ஆரம்ப உறுப்பின மூலதனம், சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் (50 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். இதனை அனைத்து பிரிக்ஸ் உறுப்பினர்களும் சமமாகப் பகிர்ந்துகொள்வர்.
 
இந்தப் புதிய வளர்ச்சி வங்கியின் முதல் தலைவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வங்கியின் தலைமையகம் ஷாங்காயில் இருக்கும். ஆளுநர்கள் குழுவின் முதல் தலைவர் ரஷ்யாவைச் சேர்ந்தவராக இருப்பார். 
 
பிரிக்ஸ் நாடுகள், பிற வளரும் நாடுகளின் உள் கட்டமைப்பு மற்றம் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான வளங்களைத் திரட்டுவதே இந்த வங்கியின் நோக்கமாகும்.
 
இந்த வங்கி, நாடுகள் எதிர்கொள்ளும் குறுகிய கால நிதிச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும். மேலும், இந்த அமைப்பு ஆப்பப்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.