வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick

இங்கிலாந்தில் பசுமை தொழிற்புரட்சி; பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இங்கிலாத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய இங்கிலாந்து பிரதமர் முடிவெடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் சுற்றுசூழல் பாதிப்புகளால் உலக நாடுகள் பெரும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்டவை இணைந்த ஜி7 நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடவும், சுற்றுசூழலை காக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தில் பசுமையான சூழலை உருவாக்கும் விதமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் பசுமை தொழிற்புரட்சிக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி 2030ல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசலில் இயங்கும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். இந்த காலத்திற்குள் மின்சார வாகன பயன்பாட்டை பெருக்குவதன் மூலம் இங்கிலாந்தின் சாலைகள் கார்பன் புகை இல்லாத பசுமையான சாலையான மாறும் எனவும், எதிர்கால சந்ததிகளுக்காக சுற்றுசூழலை காக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.