வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2016 (18:04 IST)

தள்ளுபடி விலையில் பிரசவம்: துபாய் மருத்துவமனை அறிவிப்பு

பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைப்பதுபோல் துபாயில் பெண்கள் பிரசவ காலங்களில் சிகிச்சை பெறுவதற்கு தள்ளுபடியில் குறைந்த கட்டண சிறப்பு முகாமை தனியார் மருத்துவமனை சார்பாக நாளை  நடைபெறவுள்ளது.


 
 
துபாயில் தம்பே என்ற மருத்துவமனை சார்பாக குறைந்த கட்டணத்தில் பெண்கள் பிரசவ காலங்களில் சிகிச்சை பெற முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை சார்பாக விளம்பர படுத்தியுள்ளது.
 
இந்த சிறப்பு மருத்துவ முகாம் நாளை காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணிவரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரிடம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இலவச ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
 
கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள், நாளை நடைபெறும் முகாமில் 299 திர்ஹம் செலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், தங்களுடைய மருத்துவமனையில் எப்போது வேண்டுமானாலும் 4,999 செலவில் சுகப்பிரசவமும், 8,999 திர்ஹம் (திர்ஹம் என்பது துபாய் மதிப்பில் ரூபாயாகும் 1 திர்ஹம் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 18 ரூபாய் சமம்)செலவில் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவமும் பார்த்துக் கொள்ளலாம் என தம்பே மருத்துவமனை விளம்பர படுத்தியுள்ளது.