Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் - 235 பேர் பலி

Last Updated: சனி, 25 நவம்பர் 2017 (13:11 IST)
எகிப்து நாட்டின் சினாய் பகுதில் உள்ள ஒரு மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 235 பேர் பரிதாபமாக பலியாகினர்.


 
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள அல் ராவ்தா மசூதிக்கு அருகே, நேற்று மாலை நான்கு தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர்.
 
இந்த கோர சம்பவத்தில் இதுவரை 235 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
மசூதிக்கு பிரார்த்தனை செய்ய வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
 
இந்த கோர சம்பவம் எகிப்து நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :