1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (22:18 IST)

டிரம்பின் திட்டங்களை அடியோடு மாற்றிய பிடன்

சமீபத்தில் அமெரிக்க நாட்டின்  46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்பதவியேற்பு விழாவுக்கு வராமல் புளோரிடாவிலுள்ள தனது மாளிகைக்குச் சென்றுவிட்டார்.

கோலாகலமாக நடைபெற்ற இப்பதவியேற்பு விழாவில் பேசிய அதிபர் ஜோ பிடன், அமெரிக்கா அமைதி வழிக்குத் திரும்பும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜோ பிடன் முதல்நாள் முதல் கையெழுத்தாக டிரம்பு பிறப்பித்த உத்தவுகளை நீக்கியுள்ளார்.

அதில் இஸ்லாமியர்கள் இனிமேல் அமெரிக்கா செல்வதற்கன தடை நீக்கப்பட்டுள்ளது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைவது. உல்க சுகாதாரத்தில் இருந்து நீங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்க மெக்சிகன் இடையே தடுப்புச் சுவர் கட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் நாட்டுப்பற்று வளர்க்க எடுக்கும் பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு எடுத்துள்ள ஜோ பிடனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.