1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2016 (20:52 IST)

அவிழ்ந்தது ‘பெர்முடா முக்கோணத்தின்’ மர்ம முடிச்சு

அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள்.
 

 
இந்த பெர்முடா முக்கோணமானது புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் போல இணைக்கும் கடல் பகுதியாகும். இந்த கடல்பகுதி 5 லட்சம் கிலோமீட்டர் சதுரடி பரப்பளவு கொண்டது ஆகும்.
 
இந்த முக்கோணக் கடல்பகுதியில் எண்ணற்ற கப்பல்கள் மர்மமான முறையில் மறைந்து போயுள்ளன. ஆனால், இது குறித்த உண்மை நிலவரம் எவருக்கும் தெரியாததால், ஏலியன்ஸ் என்பன உள்ளிட்ட மர்ம கதைகள் உலவ ஆரம்பித்தன. இதனால், இதை பேய் முக்கோணம் என்று லத்தீன் அமெரிக்காவில் அழைக்க ஆரம்பித்தார்கள்.
 
இதற்கிடையில், மெக்ஸிகோவின் ஆறு பிளைட் 19 விமானங்கள் காணாமல்போனது. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.
 

 
இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை அவிழ்த்து உள்ளனர். இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில் நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர்.
 
இது குறித்து ஸ்டீவ் மில்லர் என்ற கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் கூறுகையில், “பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பெரும்பாலான நேரம் மேகங்கள் சீரற்ற நிலையில் பரவி இருக்கும்.
 
ரேடார் செயற்கைக் கோளை பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் என்ன நடக்கிறது என ஆய்வு செய்யபட்டது. அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படும் காற்று வெடி வெடிகுண்டுகள், [Air bombs] போல் கடல் மட்டத்தில் இருந்து மேல் எழும்பி மீண்டும் கடலை நோக்கி கீழே விழுகிறது” என்றார்.
 
எனவே, இந்த காற்று வெடிகுண்டுகளால்தான் அப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.