1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (10:33 IST)

பாகிஸ்தான் பள்ளி தாக்குதல்: பான் கி மூன் கடும் கண்டனம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த தலிபான் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 132 மாணவர்கள் உள்பட 141 பேர் உயிரிழந்தனர்.
 
இந்தப் பள்ளிக்குள், தலிபான் தற்கொலைப் படையினர் 7 பேர், ராணுவச் சீருடையில் பாகிஸ்தான் நேரப்படி காலை 10.30 மணிக்கு நுழைந்தனர். ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று அந்தப் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களில் சிலர், தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில், 132 மாணவர்களும், பள்ளி ஊழியர்கள் 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இத் தாக்குதலில் 130 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நிகழ்த்திய அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இத்தாக்குதல் குறித்து பேசிய பான் கீ மூன் கூறியபோது, இந்த கொடூர செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கொடிய செயலுக்கு எந்தவித நியாத்தையும் கற்பிக்கமுடியாது. இதுபோன்ற பயங்கரத்திற்கு எந்த பிரச்சனையையும் காரணமாக கூறமுடியாது. பாடம் கற்றுக்கொண்டிருக்கும் தற்காப்பில்லாத குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது கோழைத்தனமான, கொடிய செயல் என்று கூறியுள்ளார்.