வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (12:22 IST)

தொடந்து கண்டறியப்படும் சிக்னல்கள்: மாயமான விமானம் விரைவில் கண்டுபிடிக்கப்படுமென நம்பிக்கை

கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற MH370 விமானம் நடுவானில் மாயமானது. மாயமாகி ஒரு மாதமான நிலையில், இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் இந்த விமானத்தின் இருப்பிடம்  குறித்து எந்த உறுதியான தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் , கறுப்பு  பெட்டி சிக்னல்களை கண்டறியும் கருவிக்கு கிடைத்த சிக்னல்கள்  மாயமான விமானத்தில் இருந்துதான் வந்திருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
நடுவானில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்துக்கொண்டிருக்கும் வேளையில்,   இந்த விமானத்தின் கறுப்பு பெட்டி மிக விரைவில் செயலிழக்கும் என்பதால், விமானத்தை தேடும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  
 
14 விமானங்களும், 13 கப்பல்களும் ஈடுபட்டிருக்கும் இந்த தேடுதல் பணயில், கறுப்பு  பெட்டி சிக்னல்களை கண்டறியும் அதிநவீன கருவிக்கு இன்றுவரை 5 சிக்னல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேசிய  ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், கறுப்பு  பெட்டி சிக்னல்களை கண்டறியும் கருவிக்கு கிடைத்த சிக்னல்கள்  மாயமான விமானத்தில் இருந்துதான் வந்திருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57, 923 சதுர கி.மீ. பரப்பளவில் தேடுதல் வேட்டை நடைபெறுவதகவும் டோனி அபோட் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.