வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (11:57 IST)

செயற்கைத் தீவை உருவாக்குகிறது சீனா

தென் சீனக் கடல் பகுதியில் உள்ள, ஸ்ப்ராட்லி தீவுப் பகுதியில், சீனா புதிதாக பெரிய தீவு ஒன்றை செயற்கையாக அமைத்து வருகிறது.
 
வியட்நாமுக்குக் கிழக்கே தென் சீனக்கடலில் ஸ்ப்ராட்லி தீவுக்கூட்டங்கள் உள்ளன. இந்தத் தீவுக்கு சீனா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
 
இந்நிலையில் பிரச்சினைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெருமளவில் மண்ணை நிரப்பி சீனா புதிதாக பெரிய தீவு ஒன்றை அமைத்து வருகிறது. இந்த செயற்கைத் தீவு 3 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்படு வருகிறது.
 
இதற்கு முன்னர், பயரிகிராஸ் கடற் பகுதியில் சீனா 3 தீவுகளை உருவாக்கியுள்ளது. தற்போது அமைக்கப்படும் இந்தத் தீவு 4 ஆவது தீவு என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலகை வியக்க வைக்கும் பல்வேறு கட்டுமானப் பணிகளை தரையிரும் தண்ணீரிலும் சீனா தொடர்ந்து கட்டி வருகிறது, அந்த வகையில் இது மேலும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.