முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்; அரசுக்கு முக்கிய தீவிரவாதி சவால்

pak
Last Updated: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (11:59 IST)
பல நாசவேலைகளில் தொடர்புடைய பயங்கரவாதி ஹபீஸ் சயீத் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று பாகிஸ்தான் அரசுக்கு சவால் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹபீஸ் முஹம்மது சயீத் எனும் பயங்கரவாதி  ஜமாத்-உத்-தாவாவின் அமைப்பிற்கு தலைவன். மேலும் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பாவோடு தொடர்புடையவன். 2008 மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல நாசவேலைகளில் தொடர்புடைய சயீத் மிகவும் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவன்.
 
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்று  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஹபீஸ் சயீத் அரசு, எங்களை அடக்க முயன்றால் இப்போது இருப்பதை விட பல மடங்கு பலத்துடன் நாங்கள் மீண்டும் எழுவோம். முடிந்தால் என்னை பாகிஸ்தான் அரசு கைது செய்து பார்க்கட்டும் என துணிச்சலாக சவால் விட்டான். 
 
இந்த நிகழ்வு பாகிஸ்தான் அரசிடையேயும், பாகிஸ்தான் மக்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :