வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:00 IST)

9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி பயிற்சி; குண்டு பாய்ந்து உயிர் இழந்த பயிற்சியாளர்

9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி பயிற்சி; குண்டு பாய்ந்து உயிர் இழந்த பயிற்சியாளர்அமெரிக்காவில் 9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி பயிற்சி கொடுத்தபோது தவறுதலாக குண்டு பாய்ந்து பயிற்சியாளர் உயிர் இழந்தார்.
 
அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் வாகா (வயது 39) லேக்கவுசு நகரை சேந்ர்தவர். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அரிஸோனாவில் உள்ள ஒயிட் கில்ஸ் பகுதியில் உள்ள திறந்தவெளி  துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சியாளராக உள்ளார். அங்கு நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதிகளின் 9 வயது மாணவி ஒருவர் துப்பாக்கி பயிற்சிக்கு வந்திருந்தார்.
 
சார்லஸ் வாகா அவருக்கு இயந்திர துப்பாக்கியை வைத்து பயிற்சி அளிக்த்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு பயிற்சியாளர் மீது பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக வாகாவை லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
இது குறித்த வீடியோ ஒன்றை போலீசார் தற்போது வெளீயிட்டுள்ளனர்.