வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:28 IST)

மதிப்புமிக்க நூறு நிறுவனத்தில் டாப்-1 ஆப்பிள் நிறுவனம்; டாப்-2 கூகுள் நிறுவனம்

உலகளவில் மிகவும் நன்மதிப்பை பெற்று திகழும் நிறுவனங்களில் முதலிடத்தில் ஆப்பிள் நிறுவனமும், இரண்டாம் இடத்தில் கூகுள் நிறுவனமும் உள்ளன.
 

 
‘இண்டர்பிராண்ட்’ என்கிற இணையதளம் 2015ஆம் ஆண்டிற்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று, வருமானத்திலும் வளர்ச்சி கண்ட நூறு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 170 பில்லியன் (சுமார் பதினோறு இலட்சம் கோடி) டாலர் ஆகும்.
 
ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் மதிப்பு 120 பில்லியன் (சுமார் ஏழு இலட்சத்து 84ஆயிரம் கோடி) டாலர் ஆகும்.
 
இந்த பட்டியலில் கோகோ கோலா நிறுவனம் மூன்றாம் இடத்தையும், மைக்ரோசப்ஃப்ட் நிறுவனம் நான்காம் இடத்தையும், ஐபிஎம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.
 
அமேசான் நிறுவனம் 10ஆவது இடத்தையும், பி.எம்.டபிள்யூ நிறுவனம் 11ஆவது இடத்தையும், ஆரக்கிள் நிறுவனம் 16ஆவது இடத்தையும், ஹெச்பி நிறுவனம் 18ஆவது இடத்தையும், ஃபேஸ்புக் நிறுவனம் 23ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.