டூருக்கு சென்ற இடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய மருத்துவர் கைது

jail
Last Modified வெள்ளி, 13 ஜூலை 2018 (16:59 IST)
சிங்கப்பூருக்கு சென்ற இந்திய மருத்துவர் நீச்சல் குளத்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த மருத்துவரான ஜெகதீப் சிங் அரோரா(46) என்பவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தன் மனைவி மற்றும்  மகளுடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். 
 
சிங்கப்பூருக்கு சென்ற அவர் ஓட்டலில் குடும்பத்துடன் தங்கினார். அங்குள்ள நீச்சல் குளத்தில் அவர், அங்கு குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது . 
 
சம்மந்தப்பட்ட பெண்கள் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டனர். அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரோராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :