1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2018 (16:19 IST)

ஒட்டு மொத்த அமெரிக்காவை அழிக்கும் பட்டன் என் மேஜை மீதுள்ளது: வடகொரிய அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் யூ தனது நாட்டின் ஏவுகனை சோதனைகள்  பூர்த்தி அடைந்திருப்பதால் அமெரிக்காவை அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜையில் இருக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என்று கிம் ஜாங் யூ கூறியுள்ளார்.
வட கொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோத்னைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது  வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க பல பொருளாதார தடைகளை விதித்தது. இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டது. இரு நாட்டு அதிபர்களுக்கு மத்தியில் வார்த்தை போரும் அரங்கேறியது. தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவியது.
 
இதனையடுத்து வடகொரிய அதிபர் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜை மீது உள்ளது. அதிக ஏவுகனை சோதனைகளை செய்து போர் தொடுக்க வல்லமையான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். அமெரிக்கா எங்கள் மீது ஒரு போதும் போர் தொடுக்க இயலாது என்று கூறியுள்ளார்.