இங்கிலாந்து இளவரசர் உட்பட பலர் மீது அமெரிக்க இளம்பெண் பாலியல் புகார்

லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 3 ஜனவரி 2015 (14:49 IST)
இங்கிலாந்து ராணி மகன், ஹார்வேர்டு பல்கலைகழக பேராசிரியர் உட்பட பலர் மீதும் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க இளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புகாரில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ தன்னை 3 முறை தன்னுடன் உறவு கொண்டதாகவும், லண்டன், நியூயார்க் மற்றும் விர்ஜின் தீவு ஆகிய இடங்களில் இந்த சம்பவம் நடைற்றதாகவும் கூறியுள்ளார்.

சமூகத்தில் பெரும்புள்ளியாக இருக்கும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் இதற்கு ஏற்பாடு செய்து உள்ளார். இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் துஷ்பிரயோகம் செயல்களை கிஸ்லைன் மேக்ஸ்வெல் எளிதாக்கினார். கிஸ்லைன் மேக்ஸ்வெல் எப்ஸ்டினுக்காக சிறுமிகளை வினியோகித்து உள்ளார் என்றும் கூறினார்.
மேலும் அவர், நான் 14 வயது சிறுமி ஆக இருந்தபோது அமெரிக்காவின் கோடீசுவரர் ஜெப்ரி எப்ஸ்டினுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை பலமுறை கற்பழித்தார். அது மட்டு மல்ல, தன்னுடைய நண்பர்களுக்கும் என்னை விருந்தளித்தார் என்று குற்றம் சாட்டினார்.


இதில் மேலும் படிக்கவும் :