5 டாலர் செலவில் கோடீஸ்வரியான 19 வயது இளம்பெண்


Abimukatheesh| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (15:45 IST)
கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரோசா டோமின்கியூவுக்கு அடுத்தடுத்து இரண்டு லாட்டரி சீட்டுகளால் அதிர்ஷ்டம் அடித்து கோடீஸ்வரி ஆனார்.

 

 
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ரோசா டோமின்கியூ(19) என்ற இளம்பெண் கடந்த வாரம் அரிசோனா பகுதியில் உள்ள லாட்டரி கடையில் 5 டாலர் மதிப்புள்ள லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான பரிசுத் தொகை 5 லட்சத்து 55 ஆயிரம் டாலர் ஆகும். ரோசா இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் கலிஃபோர்னியா பகுதியில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதற்கான பரிசுத் தொகை 1 லட்சம் டாலர்.
 
ரோசா வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டுகளிலும் அவருக்கு பரிசு கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர் 6 லட்சம் 55 ஆயிரம் டாலருக்குச் சொந்தக்காரர் ஆனார். இந்திய ரூபாய் மதிப்பில் 4 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரமாகும். இதுகுறித்து ரோசா, தான் மிகவும் விரும்பும் கார் ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :