Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தன்னைப்பார்த்து சிரித்த மனைவியை கொலை செய்த கணவன்


Abimukatheesh| Last Updated: சனி, 29 ஜூலை 2017 (16:33 IST)
தன்னைப் பார்த்து சிரித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
கடந்த செவ்வாய் கிழமை அமெரிக்காவில் மன்ஸானெரெல் - கிறிஸ்டி என்ற தம்பதியினர் கப்பலில் பயணம் செய்துள்ளனர். கப்பல் அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மன்ஸானெரெல் தனது மனைவியை அடித்து உடலை அறைக்கு இழுத்துச் சென்றதை சக பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தகவல் அறிந்த கப்பல் பாதுகாப்பு பிரிவினர் அமெரிக்காவின் புலானாய்வுத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மன்ஸானெரெல் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தனது மனைவி தன்னைப் பார்த்து கிண்டலாக சிரித்துக் கொண்டு இருந்ததாகவும், அதனால் ஆத்திரத்தில் அடித்ததில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :