1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2016 (15:25 IST)

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தமிழர்: பகவத் கீதையில் கை வைத்து உறுதிமொழி ஏற்றார்

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.


 

 
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்கோலியா சமீபத்தில் மரணம் அடைந்தார்.
 
இதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இடம் காலியானதால் அந்த இடத்திற்குப் புதிய நீதிபதியாக தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது.
 
அமெரிக்கா சட்டமுறைப்படி, அந்நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருப்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார். அதன்படி, பரிசீலினை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், கொலம்பியா மாகாணத்தில் "கோர்ட் ஆப் அப்பீல்" நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, சீனிவாசனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா முன் மொழிந்தார்.
 
இதையடுத்து சீனிவாசனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்தது.
 
இந்நிலையில், சீனிவாசன் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமெரிக்க சட்ட முறைப்படி சீனிவாசன் பதவியேற்றார். அப்போது அவர் பகவத் சீதையில் கைவைத்து உறுதிமொழி ஏற்றார்.
 
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஒருவர் பதவி ஏற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.