வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 23 ஜனவரி 2015 (19:15 IST)

ரஷ்யாவை சீர்குலைக்க உக்ரைனைப் பயன்படுத்துகிறது அமெரிக்கா: ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைனை கைபாவையாகப் பயன்படுத்தி ரஷ்யாவை சீர்குலைக்க அமெரிக்கா வருகிறது என்று பிரபல அரசியல் நிபுணர் அன்ட்ரூ காரிபோவ் கூறியுள்ளார்.
 
இது குறித்து மாஸ்கோவில் உள்ள அரசியல் வல்லுநர் ஆன்ட்ரூ காரிபோவ் கூறியதாவது:-
 
கிழக்கு உக்ரைன் பகுதியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக ரஷ்யா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றஞ்சாற்றி வருகின்றன.
 
இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருகிறது என்ற போதிலும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பெருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்த பிரச்சனையில் ரஷ்யாவை சீர்குலைப்பதற்கு அமெரிக்கா உக்ரைனை பினாமியாக பயன்படுத்துகிறது. இது மிக ஆபத்தான போக்காகும்.
 
இதேபோன்ற கொள்கையைதான் அமெரிக்கா மற்ற பகுதிகளிலும் கடைப்பிடித்து வருகிறது. இது புதிதான ஒன்றல்ல. இதைத்தான் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பின்பற்றியது.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா பேசுகையில், ரஷ்யாவை வம்புக்கு இழுத்திருக்கிறார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு நடத்துகிறது என்று கூறியுள்ளார்.
 
கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ரஷ்யா ராணுவத்தை அனுப்புகிறது என்றும் பேசியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சனையில் உக்ரைன் மக்கள் வெடிகுண்டில் அமர்ந்திருக்கும் நிலையை அமெரிக்காதான் உருவாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்படப் போவது உக்ரைன்தான். இவ்வாறு ஆன்ட்ரூ காரிபோவ் தெரிவித்துள்ளார்.