வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 31 ஜூலை 2014 (12:10 IST)

அரசு அதிகாரத்தை மீறியதாக ஒபாமா மீது வழக்கு: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

அமெரிக்க அரசின் அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக அதிபர் ஒபாமா மீது வழக்கு தொடர அந்நாட்டு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2010 ஆம் ஆண்டு சுகாதார பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதிபர் ஒபாமா தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக குடியரசுக் கட்சி புகார் எழுப்பியது.

இது குறித்து பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 201 உறுப்பினர்கள் ஒபாமாவுக்கு எதிராக வாக்களித்ததால் மசோதா வெற்றி பெற்றது.

நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சியினர் அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடததக்கது.