வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 21 நவம்பர் 2014 (14:29 IST)

50 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நாடு கடத்தப்படும் அபாயம்

அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்துவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
 
2008ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் உட்பட 50 லடசத்துக்கும் அதிகமான வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இன்றி, சட்ட விரோதமாக வசித்து வருவதாகத் தகவல் வெளியாகியது.
 
இது குறித்து நேற்று மாலை தொலைக்காட்சிக்கு நேரடியாக உரையாற்றுகையில், "அமெரிக்காவில் 50 லட்சம் மக்கள் நாடு கடத்தும் அச்சுறுத்தலில் உள்ளனர். இது பாதுகாப்பான தங்கும் இடமோ அல்லது மன்னிப்பு வழங்கும் சபையோ அல்ல. அதற்கு பதிலாக பொறுப்புடைமையோடு  புலம் பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ஆவணமற்ற ஒப்பந்த வடிவம் கொண்டு வரவேண்டும். நீங்கள் விதிகளுக்கு சம்மதித்தால் நான்  உங்களை நாடு கடத்தவில்லை என்பதை ஏற்கிறேன்.  
 
லட்சக் கணக்கானவர்களை நாடு கடத்துவது என்பது யதார்த்தமான காரியம் அல்ல. பொது மன்னிப்பு என்பது நியாயமற்றதாக இருக்கும். நமது தன்மைக்கு மாறாக பரந்த நாடு கடத்தல் என்பது சாத்தியமற்றது. இதை விளக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஒரு நடுநிலையான அணுகுமுறையை கையாள வேண்டும்" என்றார்.