1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (09:54 IST)

உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்: அமெரிக்காவில் இளைஞர்கள் மத்தியில் நரேந்திர மோடி பேச்சு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நரேந்திர மோடி 60,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.
 
அந்தக் கூட்டத்தில் அவர் கூறுகையில், “முதியோரின் ஆலோசனையால் உலகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று சிலர் நம்புகின்றனர்.
 
என்னைப் பொறுத்தவரை, இளைஞர்களின் வேகம், புதுமை, எதையும் நேர்த்தியாக செய்யும் திறன் ஆகியவைதான் சிறந்தது, வலிமையானது என்பது, என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.
 
இந்தியாவைக் கட்டியெழுப்ப 80 கோடி இளைஞர்கள் கைகோர்த்துச் செயல்படுகின்றனர். வறுமையில் இருந்து ஏழைகளை விடுவிக்க வேண்டும், அவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு, உயர்தர மருத்துவம், அனைவருக்கும் வீடு ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
 
உலகம் வளம்பெற விரும்பும் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். எல்லோரும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும், நோய்யின்றி வாழ வேண்டும்.
 
ஆன்மிகம் வளர வேண்டும். எந்தவொரு உயிரும் துன்புறக்கூடாது. உலகமெங்கும் அமைதி நிலவ வேண்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
 
உலகளாவிய இந்த முயற்சிக்கு இந்திய இளைஞர்கள் உங்களோடு கரம் கோர்ப்பார்கள் என்ற நம்பிக்கையை கூறிக்கொள்வதற்கும்தான் இந்த விழாவில் பங்கேற்க வந்தேன்“ என்று நரேந்திர மோடி கூறினார்.  இந்த விழாவில் நரேந்திர மோடி ஆங்கிலத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.