1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (12:57 IST)

நூற்றுக் கணக்கான பிணங்களுடன் உடலுறவு கொண்ட மருத்துவமனை ஊழியர்

அமெரிக்காவில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான பிணங்களுடன் மருத்துவமனை ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்தவர் கென்னெத் டக்ளஸ். இவர் ஒரு மருத்துவமனை பிணவறையில் ஊழியராகப் பணி புரிந்துவந்தார்.

அங்கு இறந்த பெண்களின் பிணங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு அங்கிருந்த 100 க்கும் மேற்பட்ட பெண் பிணங்களுடன் டக்ளஸ் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது குடிபோதையில், தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் பிணங்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.