Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

230 விமானங்கள்; அமெரிக்கா பிரம்மாண்ட போர் ஒத்திகை: பீதியில் வடகொரியா!!

Last Updated: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:37 IST)
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியில் வான்வழி போர் ஒத்திகையை துவங்கின.

கடந்த மாதம் வடகொரியா, ஹவாசாங்-15 என்னும் ஏவுகணையை சோத்னை செய்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்த நகரத்தையும் அழிக்கும் சக்தி வாய்ந்தது என தெரிவித்தது. இதனால், தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


வடகொரியா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த சோதனையை மெற்கொண்டுள்ளதால், அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளதாம். இதற்காக தென்கொரியாவுடன் வான்வழி போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.


இந்த போர் ஒத்திகை 5 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. இதில், அமெரிக்காவின் அதிநவீன ரக போர் விமானங்களான எப்-22 ராப்டர், எப்-35 உள்ளிட்ட 230-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் கலந்துகொள்கின்றன.


அதேபோல், தென்கொரியா தன் பங்கிற்கு எப்-15 கே, கே.எப்-16, எப்-5 ஆகிய நவீன போர் விமானங்களை களம் இறக்கி உள்ளது. அமெரிக்கா, தென்கொரியா வான்வழி போர் ஒத்திகையால் வடகொரியா அதிர்ச்சி அடைந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :