வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (11:38 IST)

முற்றும் வாய்ப்போர்: அமெரிக்கா - ரஷ்யா காரசார வாக்குவாதம்!

சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்கபடும் என்று ஆவேசமாக கூறியிருந்தார். 
 
ஆனால், ரஷ்யா மற்றும் சிரியா அரசு ராசயன தாக்குதலுக்கும் எங்களும் எந்த் சம்மந்தமும் இல்லை என தனித்தனியே அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கான ஆதரங்களும் இல்லை என கூறியிருந்தது. 
 
சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகினர்னர். சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. 
 
இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க, ரஷ்ய தூதர்கள் மத்தியில் காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது. அமெரிக்க தூதர் கூறியதாவது, சிரியாவில் ரசாயன தாக்குதலுக்கு காரணமான அரக்கனுக்கு (சிரியா அதிபர் ஆசாத்) மனசாட்சி இல்லை. 
இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் கரங்களில் ரத்த கறை படிந்திருக்கிறது. ஆசாத்துக்கு துணை நிற்பதற்காக அந்த நாடு வெட்கப்பட வேண்டும். ஆசாத்தின் கொடூர ஆட்சிக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
 
இதை மறுத்த ரஷ்ய தூதர், எவ்வித விசாரணையும் இன்றி ரஷ்யா, ஈரான் மீது பழி சுமத்துவது ஏற்புடையது அல்ல. ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என கூறியிருந்தார். மேலும், ரஷ்யாவுக்கு சீனா ஆதரவாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.