வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (15:03 IST)

அல்ஜீரிய விமான விபத்து: விரைந்தது மீட்புக் குழு

116 பேருடன் விழுந்து நொறுங்கிய ஏர் அல்ஜீர்ஸ் விமானம் விழுந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

புர்கினா ஃபாஸோ நாட்டில் இருந்து 116 பேருடன் அல்ஜீரியாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் மாலி நாட்டில் விழுந்து நொறுங்கியது..

இதுகுறித்து ஏர் அல்ஜீரிஸ் விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

மெக் டோனல் டக்ளஸ் எம்டி-83 என்ற அந்த விமானம், புர்கினா ஃபாஸோ நாட்டுத் தலைநகர் ஒளகாடூகு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அல்ஜீரியத் தலைநகர் அல்ஜியர்ஸுக்கு வந்து கொண்டிருந்தது.

அல்ஜீரிய எல்லையில் இருந்து 500 கி.மீ. தொலைவில், மாலி நாட்டின் காவ் பகுதியில் அந்த விமானம் வந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக வழித்தடம் சரிவரத் தெரியாத நிலையில் இருந்தது.

இதனால், அல்ஜியர்ஸில் இருந்து புறப்பட்டு மாலி தலைநகர் பமாகோ நோக்கி அதே வழித்தடத்தில் பயணிக்கும் மற்றொரு விமானத்துடன் அந்த விமானம் மோதிவிடக் கூடும் என்பதால், பயணிக்கும் பாதையை மாற்றுமாறு அந்த விமானத்தின் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், திடீரென அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாலி நாட்டின் தென்கிழக்குப் பகுதி நகரான காவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள திலெம்ரசி என்ற பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது“ என்று ஏர் அல்ஜீரிஸ் விமான நிறுவனம் தெரிவித்து.

இதனிடையே, ஒளகாடூகு விமான நிலையம் தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், மாலியின் காவ் நகருக்கும், கிடால் நகருக்கும் இடையில் உள்ள பாலைவனப் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதை அங்கு முகாமிட்டுள்ள பிரான்ஸ் படையினர் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.