வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (15:29 IST)

ஏர் ஆசியா: தலைமை பைலட் இருக்கையை விட்டு எழுந்து சென்றதால் விபத்து

ஏர் ஆசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேசியாவின் சுரபவாயாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. 162 பேருடன் சென்ற இந்த விமானம் நடுவானில் மாயமானது. அது, ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்தது.
இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. 65 கப்பலகள், 14 விமானக்கள், 19 ஹெலிகாபடர்கள் என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
 
அப்போது இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் கரிமட்டா ஜலசந்திக்கு அருகில் விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 70 உடல்கள் மீட்கபட்டுள்ளன.
 
இதைத் தொடர்ந்து நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்புக் குழுவினர் ஜாவா கடல் பகுதியில் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விமானத்தின் பிரதான உடல் பகுதி மற்றும் கருப்பு பெட்டி உள்ளிட்டவற்றை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. மேலும் எஞ்சியுள்ள பயணிகளின் உடல்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் அடுத்த பக்கம்...

இந்நிலையில் ஜாவா கடலில் விழுந்து விபத்திற்குள் சிக்குவதற்கு முன்னதாக ஏர் ஆசியா விமானம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக செங்குத்தாக சென்றது விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகுவதற்கு முன்னதாகவும், விபத்தில் சிக்குவதற்கு முன்னதாகவும் வானில் செங்குத்தாக வழக்கத்திற்கு மாறாக வேகமாக சென்றுள்ளது என்று இந்தோனேசியா போக்குவரத்துதுறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஏர் ஆசியா விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னாதாக சுமார் 6000 அடி உயரத்திற்கு செங்குத்தாக சென்றுள்ளது என்று இந்தோனேசியா போக்குவரத்து துறை அமைச்சர், நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.
 
விமான விபத்துக்கு காரணம் விமான தலைமை பைலட் தான் என தற்போது தெரியவந்து உள்ளது. வழக்கத்துக்கு மாறாக விமான பைலட் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று விட்டார் இதனால் துணை விமான பைலட் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தலைமை மீண்டும் இருக்கைக்கு திரும்ப மிகவும் தாமதமாகி உள்ளது. இதனால் விபத்தை தடுக்க முடியவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.