1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (05:53 IST)

ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பெண் நீதிபதி நியமனம்

ஆப்கானிஸ்தானில், முதல் முறையாகப் பெண் நீதிபதி ஒருவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


 

ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகள் கொண்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவிக் காலம் 10 ஆண்டுகளாகும். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார் அனீஸா ரசூலி. இவர் ஏற்கனவே, சிறார் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
 
உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒரு பெண் நியமிக்கப்படுவது ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்த நியமனத்துக்கு மதத் தலைவர்களின் ஒப்புதல் உள்ளது என்று அதிபர் கனி தெரிவித்தார். ஆனால், அனிஸா நியமனம் அங்குள்ள தீவிர மதவாதிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில், இந்த நியமனம் குறித்து ஆக்பானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், நீதித் துறையின் அமைப்பில் எந்தவித மாறுதலும் ஏற்படாது என்றார்.