வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (08:58 IST)

6 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த 60 வயது மத போதகர்

ஆப்கானிஸ்தானில் ஹேராத் மாகாணத்தில் 60 வயதான முகம்மது கரீம் என்ற மத போதகர் ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.


 
 
காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமியின் பெற்றோர் தமக்கு கடவுள் பெயரால் அந்த சிறுமியை தானமாக அளித்ததாகவும், இந்த திருமணம் கடந்த ரமலானின் போது 40 பேர் முன்னிலையில் நடந்ததாகவும் முகம்மது கரீம் கூறியுள்ளார்.
 
இந்த நபருடன் இருக்க எனக்கு பயமாக இருக்கிறது என திரும்ப திரும்ப சொல்லும் அந்த சிறுமி வேறு எதுவும் பேச மறுக்கிறார் என மகளிர் நல வாரிய தலைவர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
சிறுமியின் தாய், தந்தையின் ஒப்புதலுடன் தான் இந்த திருமணம் நடந்ததாக கரீம் கூறினார். ஆனால் சிறுமியின் பெற்றோர்கள் இதனை மறுத்துள்ளனர். தங்கள் மகள் கடத்தப்பட்டுள்ளார் என கூறினார்கள்.
 
மத போதகரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விரைவில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்படுகிறது.