வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (06:17 IST)

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம்

உலகப் புகழ்பெற்ற பெருமைமிகு நிறுவனமான கூகுள் நிறுவனம், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.


 

அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் கூகுள் (Google) ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. 
 
கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவைஆகும். முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். 
 
1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்ற தேடுபொறி நிறுவனமாகத் திகழ்கிறது. 
 
உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டது. ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்கிறது. இருபத்தி நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிக்கும் திறன் கொண்ட பெருமைமிகு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், அப்துல் கலாமுக்கு தனது இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துள்ளது. 
 
கூகுள் தேடல் வார்த்தைகளைத் தட்டச்சு செய்யும் நீள்சதுரப் பெட்டிக்குக் கீழ், கருப்பு ரிப்பன் கொண்ட ஒரு புகைப்படம் வைத்து, அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. 
 
அந்தக் கருப்பு ரிப்பன் புகைப்படம் அருகே கம்ப்யூட்டர் மவுசைக் கொண்டு சென்றால், அப்துல் கலாம் நினைவாக (In memory of Dr APJ Abdul Kalam) என்ற வார்த்தைகள் திரையில் தோன்றும் வகையில் வடிவமைத்துள்ளது. இவ்வாறு தனது அஞ்சலியை கூகுள் நன்றியோடு தெரிவித்துள்ளது. 
 
கூகுள் என்பது வெறும் இயந்திரமாக இல்லாமல், ஒவ்வொரு நாட்டின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், அவர்களின் உணர்வு, உண்மை, கடமை, திறமை, முயற்சி போன்ற பலவற்றில் ஒன்றிணைந்துவிட்ட போதும், கடல் கடந்து நன்றி கொண்ட ஒரு அற்புத நிறுவனம் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளது.