வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 4 மே 2015 (18:25 IST)

தலைக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்ட தீவிரவாதி கொலை

பிலிப்பைன்ஸ் -இல் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மோரா விடுதலை முன்னணி என்ற இயக்கம் செயல்பட்டு வந்தது. இந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் பாசித் உஸ்மான் என்ற தீவிரவாதி தெற்கு பிலிப்பைன்ஸ் -இல் நடந்த பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடையவர். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.
 
பயங்கர தீவிரவாதியான அப்துல் பாசித் உஸ்மானின் தலைக்கு அமெரிக்கா ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடி) பரிசு அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் -இல் உள்ள மின்டநாவ் தீவில் உள்ள ஜியூன்டலுகான் நகரில் தனது கூட்டாளிகளாலேயே தீவிரவாதி அப்துல் பாசித் உஸ்மான் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 5 பேரும் இறந்து கிடந்தனர். இதனை பிலிப்பைன்ஸ் ராணுவம் உறுதி செய்துள்ளது.
 
அமெரிக்கா அறிவித்த பரிசு தொகைக்கு ஆசைப்பட்டு உஸ்மானின் கூட்டாளிகளே அவரை தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.