Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மரணம்: போலி பிபிசியால் பரபரப்பு!

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மரணம்: போலி பிபிசியால் பரபரப்பு!


Caston| Last Updated: சனி, 31 டிசம்பர் 2016 (12:21 IST)
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்து விட்டதாக டுவிட்டரில் உள்ள பிபிசி பக்கம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட பின்னர் அந்த பிபிசி பக்கம் போலியானது என்பதும் பரவிய செய்தி உண்மையல்ல என்பதும் தெரியவந்தது.

 
 
டுவிட்டரில் இயங்கி வரும் போலி பிபிசி செய்தி பக்கம் ஒன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதில், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் 90 வயதில் மரணடைந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது என பதிவிடப்பட்டுள்ளது.
 
இந்த பொய் செய்தியை உண்மை என நம்பி அது தீயாக பரவியது. இதனையடுத்து பிபிசி செய்தியின் நிருபர் ரொரி செல்லான் ஜோன்ஸ் என்பவர் இந்த செய்தி வதந்தி என அதிரடியாக மறுத்தார்.
 
இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதில், ராணி பயங்கர சளி பிரச்சனையில் இருந்து தொடர்ந்து மீண்டு வருகிறார். மேலும் அவர் நலமுடன் இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :