விஷ ஊசி செலுத்தி 20 நோயாளிகளைக் கொன்ற சைக்கோ செவிலியர்

nurse
Last Modified வியாழன், 12 ஜூலை 2018 (11:21 IST)
ஜப்பானில் 20 நோயாளிகளை விஷ ஊசி போட்டுக் கொன்ற சைக்கோ செவிலியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நோயாளிகளின் உயிரை காப்பற்றும் உன்னத சேவையை செய்யும் செவிலியர் ஒருவரே, நோயாளிகளை கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அய்யூமி குபோகி என்ற பெண் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் கண்காணிப்பில் இருந்த நோயாளிகள் அவ்வப்போது மர்மமான முறையில் இறந்து போவது வாடிக்கையாக இருந்துள்ளது.
 
இந்நிலையில் அதிகம் தொல்லை கொடுக்கும் நோயாளிகளை, அய்யூமி மருந்தில் விஷம் கலந்து கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் இவர் 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோசில் வி‌ஷத்தை கலந்து செலுத்தி அவரை கொன்றுள்ளார்.
 
இதனையறிந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் அந்த சைக்கோ செவிலியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :