குழந்தைக்கு பிளீச்சிங் பவுடர் போட்டு குளிப்பாட்டும் தாய்

baby
Last Modified வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (13:31 IST)
குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் தோல் நோய் காரணமாக அவரது தாய் குழந்தைக்கு பிளீச்சிங் பவுடர் போட்டு குளிக்க வைத்து வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த ரவன் போர்டு (23) என்ற பெண்ணுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. பிறந்தது முதலே குழந்தைக்கு அபூர்வ தோல் நோய் இருந்தது. 
 
இதனால் மருத்துவர்கள் ரவனிடன் இரண்டு நாளுக்கு ஒரு முறை குழந்தைக்கு பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு அறிவுறுத்தனர். ரவனாவும் அவ்வாறே செய்து வருகிறார். குழந்தைக்கு மேலும் ஒரு பிரச்சனை இருக்கிறது என்னவென்றால், குழந்தைக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இதனால் குழந்தையின் பெற்றோர், தங்களது மகளை கவனமுடன் கவனித்து வருகின்றனர். இப்படி இருக்கும் வேளையில் பலர் தங்களது குழந்தையை கிண்டலடிக்கின்றனர் என ரவன் போர்டு வேதனையோடு கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :