1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2014 (15:39 IST)

கடித்துக் குதற வந்த 14 சிங்கங்களை விரட்டி அசத்திய குட்டி யானை

தென்னாப்பிரிக்கா தீவுகளில் உள்ள ஜாம்பியா நாட்டில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 14 சிங்கங்கள் இணைந்து நடத்திய தாக்குதலை எதிர்கொண்ட சிறிய யானைக் குட்டி, சிங்கங்களை விரட்டி அடித்து உயிர் பிழைத்தது.
 
இது தொடர்பாகச் சுற்றுலாப் பயணிகள் எடுத்த எடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பசியோடு இருக்கும் சிங்கங்கள் யானைக் குட்டியின் மீது பாய்கின்றன. குட்டி யானையைச் சுற்றி வளைத்துச் சிங்கங்கள் தாக்குதல் நடத்துகின்றன.
 
சிங்கங்களின் தாக்குதலில் இருந்து முதலில் விடுபட முடியாத குட்டி யானை பின்தங்குகிறது. பின்னர் ஆக்ரோஷமாக எழுந்த குட்டி யானை, சுற்றி வளைத்து நின்ற சிங்கங்களை விரட்டுகிறது. ஆனாலும் சிங்கங்கள் யானையின் மீது ஏறி நின்று கடிக்கின்றன. ஆனாலும் தளர்ந்துவிடாத அந்தக் குட்டி யானை சிங்கங்களைக் கால்களால் உதைத்தும், தும்பிக்கையால் அடித்தும் விரட்டுகிறது.பின்னர் யானையின் பின்னால் சிங்கங்கள் கடிக்கின்றன.
 
இறுதியாக அந்தக் குட்டி யானை வேகமாகத் தண்ணீருக்குள் ஓடுகிறது. பின்னர் தன்னைத் தாக்க வந்த சிங்கங்களைத் திரும்பி நின்று விரட்டி அடிக்கிறது. அந்த நேரத்தில் யானை மீது இருந்த சிங்கம் இழே இறங்குகிறது. பிறகு குட்டி யானை சிங்கங்களை விரட்டிவிட்டு பத்திரமாக உயிர் பிழைத்துச் சென்றது.

அனைவரையும் பிரமிக்க வைக்கும் அந்த காட்சி இங்கே.