21 குழந்தைகளை பெற்றெடுத்த 42 வயது மாமனுஷி

baby
Last Modified வெள்ளி, 4 ஜனவரி 2019 (13:20 IST)
பிரிட்டானியாவில் 42 வயதுடைய பெண் ஒருவர் 21 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகளை பெற்று வளர்ப்பது அவ்வளவு ஈசியல்ல. அதிலும் குறிப்பாக இந்த காலக்கட்டத்தில், குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களுக்கு உணவளித்து, படிக்கவைத்து, திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் விலைவாசி அப்படி.
list
இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த ரஃபோட் என்ற பெண் தனது 42வது வயதில் 21வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 13வது வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் குழந்தைகளை வளர்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். இனி குழந்தையை பெற்றெடுக்க போவதில்லை எனவும் விரைவில் குடும்ப கட்டுப்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :