8 வயது சிறுமியை திருமணம் செய்த 10 வயது சிறுவன்

kid
Last Modified புதன், 21 நவம்பர் 2018 (09:25 IST)
ருமேனியாவில் 10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமெங்கிலும் குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு விரோதமானது என கூறப்படுகிறது. குழந்தை திருமணத்திற்கு எதிராக அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திருந்தாத மக்கள் பலர் சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர்.
 
ருமேனியா கிரையோவை சேர்ந்த நாடோடி கும்பலைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அந்த குழந்தைகள் முழித்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் போலீஸார் அந்த குழந்தைகளின் பெற்றோரை கைது செய்ய முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :