Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லண்டன் தீவிபத்து: 79 பேர் மரணம், அதிகாரபூர்வ தகவல்


sivalingam| Last Modified செவ்வாய், 20 ஜூன் 2017 (05:06 IST)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 27 மாடி கட்டிடமான க்ரீன்ஃபெல் டவர் தீப்பற்றி எரிந்தது அனைவரும் தெரிந்ததே. இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.


 


இந்த நிலையில் இந்த தீவிபத்தில் 79 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரது உடல்களும் கைபற்றப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டதாகவும், மரணம் அடைந்த அனைவருக்கும் தீயணைப்பு துறையினர், மீட்புப்படையினர் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தியதாகவும் தகவல்கள்  வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த தீவிபத்தினால் காணாமல் போன ஐந்துபேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிருடன் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடனே இவர்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இப்போதுதான் அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கட்டிடத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தின் உறுதித்தன்மை சோதனை செய்யப்பட்டவுடன் இந்த கட்டிடத்தை இடிப்பதா? அல்லது பராமரிப்பு செய்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :