வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (20:59 IST)

மத்திய ஆசியாவில் நிலநடுக்கம் - இந்திய எல்லையிலும் அதிர்வு

மத்திய ஆசியா பகுதிகளில் ரிக்டர் அளவில் 6.7 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 

 
மத்திய ஆசியாவின் கிர்கிஸ்தான் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. நேற்று மாலை ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்க சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
 
இதனையடுத்து இந்திய வங்கதேச எல்லையிலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
 
இதே போன்று இன்று அதிகாலை 2.40 மணியளவில் ஒக்கலகாமா பகுதியில் நில நடுக்கம், ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.